​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தொண்டை வலி இருந்தும், தொண்டே முக்கியம்" என்பதால் நிகழ்ச்சிக்கு வந்ததாகப் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Published : Nov 10, 2023 4:02 PM

தொண்டை வலி இருந்தும், தொண்டே முக்கியம்" என்பதால் நிகழ்ச்சிக்கு வந்ததாகப் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

Nov 10, 2023 4:02 PM

கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் விதிமுறைகளை மக்கள் உள்ளார்ந்து புரிந்து கொண்டதால் திட்டத்தை விமர்சித்தவர்கள் அமைதியாகிவிட்டனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்த பயனாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த சில நாட்களாக காய்ச்சலும் தொண்டை வலியும் இருந்ததாகவும் தற்போது காய்ச்சல் குறைந்து தொண்டை வலி மட்டும் இருப்பதாகவும் கூறினார். 

மேல்முறையீடு செய்யும் தகுதியுள்ள அனைவருக்கும் வரும் டிசம்பர் முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறிய முதலமைச்சர், அனைத்து நிலை அரசுப் பணியாளர்களின் உழைப்பால், விமர்சனங்களுக்கு இடமின்றி இத்திட்டம் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினார். 

சென்னை திருவான்மியூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும், கோவையில் அமைச்சர் முத்துசாமியும், சேலத்தில் அமைச்சர் கே.என்.நேருவும், விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்துக்கான ஏடிஎம் அட்டைகளை பயனாளிகளுக்கு வழங்கினர். 

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ரூபே அட்டைகளை பெண்களுக்கு வழங்கினார்.